Thursday, July 3, 2008

புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா



புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா
பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா
அன்னையை போலே காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி நாதா

மந்திரமானது உன் பெயர் பாபா
மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா
ஜென்மங்கள் யாவிலும் துணை நீ பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

மௌனத்தின் மொழியாய் பேசிடும் பாபா
மன்னுயிர்க்கெல்லாம் தலைவன் பாபா
பௌர்ணமி நிலவாய் ஒளி தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

திவ்ய மூர்த்திகள் வடிவே பாபா
தீவினை அகற்றும் திருவே பாபா
கவ்விய பாவம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

சிரடி மண்ணில் தோன்றிய பாபா
செய்தாய் பற்பல அற்புதம் பாபா
பூவடி தந்து அருள்வாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

தாய்மடி தேடி தவித்தோம் பாபா
தாங்கிட வந்தாய் நீயே பாபா
ஆதரவான உறவே பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

பரம்பொருள் நீயென அறிந்தோம் பாபா
பக்தியில் உன்னைத் தொழுதோம் பாபா
கரங்களை நீட்டி காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

தடைகளை நீக்கும் பேரரருள் பாபா
தன்னிகரில்லா எங்களின் பாபா
இடர்களை களையும் வளம் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

குழந்தை உள்ளம் கொண்டாய் பாபா
குறைகளை நீக்கும் குருவே பாபா
நிழல் தரும் மரமாய் நின்றாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

விழுந்திடும் விதையாய் விளங்கிடும் பாபா
விதை விடும் பயிராய் பயன் தரும் பாபா
எழுந்திடும் கதிராய் சுடர்விடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

நீரினில் தீபம் ஏற்றிய பாபா
நெஞ்சினில் உன்னை வைத்தோம் பாபா
நேரிடும் துன்பம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

பூரணமான அருளே பாபா
பூமியை காத்திட வந்தாய் பாபா
யார் உன்னை போற்றிலும் வளம் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

ஆயிரம் யுகங்கள் வாழ்ந்திடும் பாபா
அடியவர் கெல்லாம் நலம் தரும் பாபா
தாமரை பூவாய் சிரித்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

வாழ்வினில் உன்னை வணங்கிட பாபா
வரும் வினையாவும் போக்கிடும் பாபா
தாழ்வுகள் அகன்றிட செய்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

காலையில் விழித்ததும் உன் முகம் பாபா
காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா
பாலேனும் உள்ளம் படைத்தவர் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

நாளைய பொழுதை நலமாய் பாபா
நடத்திட அருளும் இறைவா பாபா
தாழ் பணிந்தோமே அன்புடன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

உதி நீர் நோய்களை போக்கிடும் பாபா
உலகோர் போற்றிடும் பகவான் பாபா
நீதியை மண்ணில் காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

சோதனை ஆயிரம் நீக்கிடும் பாபா
சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா
சாதனை புரிந்திட துணை வரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா


எளியவர் கெல்லாம் எளியோன் பாபா
ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா
தலைமுறை காக்கும் தயாபரி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

நிலைத் தரும் நிம்மதி நின்பதம் பாபா
நினைவுகள் எல்லாம் உன் வாசம் பாபா
சலனத்தை வெல்லும் சக்தியே
சர்வேஸ்வரனே சாயி பாபா

சுடு மணல் பாறையில் நிழல் தரும் பாபா
சுழ்ந்திடும் இருளை விளக்கிடும் பாபா
கடலென கருணை கொண்டாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

விடை தெரியாத விளக்கம் பாபா
விண்ணும் மண்ணும் ஆழ்வது பாபா
சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

அடைமழை நாளில் குடையாய் பாபா
அன்பரைக் காத்திட வருவாய் பாபா
சரணடைந்தொமே உன்னிடம் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

இமயத்தை போலே உயர்ந்தாய் பாபா
இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா
சமயத்தில் வந்து உதவிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

சர்வேஸ்வரனே சாயி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா

MOHANSUBRAMANIAMமோஹன் சுப்ரமணியம்

"Whatever may be said, whosoever may say it - to determine the truth of it, is wisdom" - Thirukural

5 comments:

Anonymous said...

Need lyrics for song from baba pugazh maalai illayaraja music
சாயிநாதா... சாயிநாதா... உன் தாய் தந்தை யாரென்று சொல்... யாருமில்லா எங்களுக்கு

Anonymous said...

சுப்பர்

Anonymous said...

Thank you for the lyrics 🙏

Anonymous said...

Very good collection of Sai lyrics in Tamil. Thank you ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 🙏

Anonymous said...

Thanks mohan